Monday, August 2, 2010

சும்மாதான் ஹீ ஹீ

சமீபத்தில் ஒரு தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருந்த பெண் வல்லினம் மெல்லினம் எல்லாவற்றையும் கலந்து தமிழைக் கொலை செய்து கொண்டிருந்தது - bathma, meha ஹிட் , ராஜா சேஹரன் இப்படி எல்லாம் இஷ்டத்துக்கு உச்சரித்துக்கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
எனக்கு வைரமுத்துவின் அழகான வரிகள் நினைவுக்கு வந்தன:
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்கு தெரிகின்றதே வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தங்களுக்கு தெரிகின்றதா

இந்த வரிகளைக் கூட அந்த பெண் இப்படித்தான் படிப்பாளோ என்னமோ:

வலிமிஹும் இடங்கல் வலிமிஹா இடங்கல் தமிழுக்கு தெரிகிந்ரதெ
வலிமிஹும் இடங்கல் வலிமிஹா இடங்கல் தங்கலுக்குத் தெரிகின்ரதா

இது மாதிரி உச்சரிக்கும் போது தமிழுக்கும், தமிழை நேசிப்பவர்களுக்கு எத்தனை வலிக்கும் என்று அந்த பெண்ணுக்கு எங்கே புரியப் போகிறது?

எப்படியும் பாடல வரிகளை யாரும் கவனிப்பதில்லை என்பதினால்தானோ 'ஆச்சா போச்சா' ' என்று எதையோ எழுதி பாடலைப் பதிவு செய்து விடுகிறார்கள். இசை நன்றாக அமைந்து விட்டால் அது வெற்றியும் ஆகிவிடுகிறது. தமிழ் படம் என்ற படத்தில் மிக அழகாக oh maha zeeya பாடலில் கிண்டல் செய்திருந்தார்கள். வார்த்தைகளுக்கு அர்த்தமே வேண்டாம். புரியாத மொழியில் இருந்தால் இன்னும் நலம். அப்படி இருக்கிறது நிலைமை. ரஹ்மான் க்கு இது போன்ற வார்த்தைகளின் மீது பயங்கர காதல் - 'கும்சும் கும்சும் குப்பச்சி, 'அஜூபா ஜுஜோபா' என்று எதாவது ஹம்மிங் வைத்து விடுவார். அதுவும் சூப்பர் ஹிட் ஆகிவிடும்.

ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு பாடல்களை வானொலியில் மட்டுமே கேட்க முடியும். அதனால் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் அதிகம். படங்களிலும் பாடல்கள் படத்தோடு ஒட்டி இருக்கும். இப்போது போல பொழுது போகவில்லை என்றால் சுவிட்சர்லாந்த்தில் ஒரு டூயட் இல்லை என்றால் கனவு சீன் என்பது போன்ற அமைப்புகள் இருக்காது. ஒரு படத்தின் பாடல வரிகளில் இருந்தே அந்த படத்தின் கதையை ஓரளவு யூகிக்க முடியும். படங்கள் மறந்து போய் விட்டாலும் பாடல்கள் நினைவில் நிற்கின்றன. வானம்பாடி என்றொரு படம். நிறைய பேருக்கு நினைவிருக்காது. ஆனால் அந்த படத்தில் வந்த 'கங்கைக் கரைத் தோட்டம்', 'ஏட்டில் எழுதி வைத்தேன்' , 'கடவுள் மனிதனாக வேண்டும்' போன்ற பாடல்கள் எல்லோருக்கும் நினைவிருக்கும். அத்தனை அழகான, கருத்துள்ள பாடல்கள். இன்னும் சில பாடல்கள் ஏதோ நமக்காகவே நம் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்டவை போலிருக்கும். இதனாலேயே அவை காலத்தை மீறி இன்றும் பசுமையாக இருகின்றன.

வானொலியில் கேட்கும்போது பாடல் வரிகளாலும், இசையாலும், பாடகர்களின் குரலாலும் அவ்வளவு பிடித்த அந்த பாடல்களை இன்று சில சமயம் தொலைக்காட்சியில் பார்க்கும்போது சற்று அதிர்ச்சி ஆகி விடுகிறது.
'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்' என்று ஒரு அருமையான பாடல். அந்தக் காட்சியை இப்போது சமீபத்தில்தான் ஒரு தொலைக்காட்சி சேனலில் பார்த்தேன். வெறுத்துப் போய் விட்டேன்: அசோகனுக்கு இப்படி ஒரு பாட்டு தேவையா என்று. அதே போல 'ரோஜா மலரே ராஜகுமாரி' என்று ஒரு அழகான melody. திரையில் பார்த்தால் சச்சுவும் ஆனந்தன் என்று ஒரு ஹீரோ(?யாரோ ?) வும். கோர்ட்டில் கேஸ் போடலாமா என்று கோபம் வந்தது எனக்கு. இப்போதும் சில படங்களில் இது போன்ற அநீதி நடக்கிறது. இந்த 'ஜீன்ஸ்' படத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். அந்த பிரஷாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய். இது முதல் அநியாயம் என்றால் பாடல்களுக்குக் குரல் ஹரி, உன்னி கிருஷ்ணன் . இதெல்லாம் கொஞ்சம் too much இல்லை? பாடல்களை கேட்டு விட்டு படத்துக்குப் போனவர்களின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இது போலத்தான் அந்த மைக் மோகனுக்கும் ஒரு ராசி. பாட்டெல்லாம் பிரமாதமாக அமைந்து விடும். ' ஏதடா இளையராஜா, SPB, வைரமுத்து என்று ஒரு கூட்டணியே நமக்காக கஷ்டப்படுகிரார்களே' என்று கொஞ்சமாவது கஷ்டப்பட்டு நடித்தாரா என்றால் அதுதான் இல்லை. போதாக்குறைக்கு இவருக்கு என்று குரல் கொடுக்க வேறு ஒரு ஆள் - சுரேந்தர். இந்த மாதிரி அநியாயத்தின் உச்சகட்டம் 'பூவே செம்பூவே' என்ற பாடல் 'சொல்ல துடிக்குது மனசு' என்ற படத்தில். படத்தைப் பார்த்தவர்களுக்குப் புரியும் என் கோபம்.
இதுக்கெல்லாம் ஒரு சட்டம் போட வேண்டும் இனிமேல். என்ன சொல்கிறீர்கள்?

இப்போது FM ரேடியோ வாயிலாகத் திரும்பவும் வானொலி கலாச்சாரம் முன்னுக்கு வந்து கொண்டிருதாலும், முன்னைப் போல பாடல்களை அனுபவிக்க முடியவில்லை. முன்பெல்லாம் தொகுப்பாளர்கள் பாடலைப் பற்றிய சுவையான விஷயங்களைச் சொல்லுவார்கள். அளவாகப் பேசி பாடல்களை முழுமையாக ஒலிபரப்புவார்கள். இப்போது எங்கே? இந்த RJ க்கள் பேசிப் பேசியே கழுத்தறுக்கிறார்கள். அதென்ன எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியே பேசுகிறார்கள் என்றும் புரியவில்லை. பாடல்களையும் பாதி பாதிதான் ஒலிபரப்புகிறார்கள். இது நிம்மதியாய் பாடல்களை அனுபவிக்க ஏற்றமாதிரி இல்லை. fast food மாதிரி அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுவது மாதிரிதான் இருக்கிறது. பாட்டை இந்த மாதிரி அனுபவிக்க முடியுமா சொல்லுங்கள். இது இன்றைய இளைய தலைமுறையின் வாழ்கை முறையை சார்ந்ததாக இருப்பதினால் அவர்களுக்கு வேண்டுமானால் பிடிக்குமோ என்னமோ? அப்துல் ஹமீது போல வல்லினம் மெல்லினம் எல்லாம் சரியாக உச்சரித்து தமிழ் சினிமாப் பாடல்களைப் பற்றிய அபாரமான ஞானத்தோடு தொகுப்பவர்கள் எல்லாம் இன்றைய வானொலிகளுக்குத் தேவையில்லை. சும்மா பொழுதுபோக்காகப் பேசத் தெரிந்தால் போதும்.

ஹிஹிஹி, இதைப் படிக்கும்போதே புரிந்திருக்குமே எனக்கும் பொழுது போகவில்லை என்று. அதேதான். serious ஆக போஸ்ட் எழுத கை ஓடவில்லை. சரி இப்படி ஏதானும் oh maha zeeya மாதிரி அர்த்தமில்லாமல் கொஞ்சம் சத்தம் போட்டால் ஏதானும் inspiration வருகிறதா பார்ப்போமே என்றுதான். கோபித்துக் கொள்ளாதீர்கள்.

11 comments:

 1. Maaperum sabaithanil nee nadanthal unakku malaigal vizha vendum, oru matru kuraiyadha mannavan ivan enru potri pugazhavendum .... hmmmm ... pazhaiyaa nyabagathai vara vechu ennaiyum case podrathukku lawyer thedara levelkku kondu vanduteenga.

  If we (you and people like me) were given a chance to choose RJs and singers, we could use all the old songs and use them as tongue twisters and make that a qualifying criteria.

  Like my mother would say .. nakkula vasamba vechu posukka .. .enna thamizh kolai..

  ReplyDelete
 2. ANON : ஆஹா, நெஞ்சைத் தொடும் வரிகள். ஆமாம் எல்லோருமா சேர்ந்து ஒரு pil போடுவோமா?
  இந்த rj களுக்கு முதல் பரீட்சை:
  அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா?
  -- அப்புறம் அந்த 'வசம்பு' வசவு - கேட்டு ரொம்ப நாளாச்சு.

  ReplyDelete
 3. "நீங்க சும்மா எழுதின போஸ்ட் கூட இவ்வளோ நல்ல இருக்கு படிப்பதற்கு. நீங்கள் சொல்வது ரொம்ப சரி. இப்போ இருக்கிற பாட்டெல்லாம் மனசுல நிக்கறதில்லை. நான் இந்த generation ஆளா இருந்தாலும், எனக்கு எப்போதும் Ilaiyaraja, SPB, Vairamuththu பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.
  பாட்டுக்கு பொருத்தம் இல்லாத scene list- இல் , " சங்கத்தில் பாடாத கவிதை" என்ற பாடல் " ஆட்டோ ராஜா" படத்துடையது தான் ஞாபகத்திற்கு வருகிறது. எனக்கு ரொம்ப பிடித்த பாடல், ஆனால் அந்த பாட்டை பார்க்கவே முடியாது. என்னுடைய மாமி சொல்லுவார் - " அது கேட்கற பாட்டு , பார்க்கிற பாட்டில்லை" என்று. அது ரொம்ப சரி.
  எனக்கு உச்சரிப்பு சரி இல்லை என்றால் அந்த பாட்டே பிடிக்காமல் பொய் விடுகிறது, even if the song is good otherwise.
  எனக்கு லேட்டஸ்ட் பாட்டு எல்லாம் அவ்வளவாக தெரியாது. எப்போதும் என் மொபைல் போன்-இல் உள்ள இளையராஜா பாட்டுக்கள் தான் கேட்பேன். எனக்கு சலிப்பதே இல்லை. ஆயிரம் முறை கேட்டாலும் சரி. "
  Aargee

  ReplyDelete
 4. aargee: கேக்கற பாட்டு, பார்க்கிற பாட்டு - அழகான பாகுபாடு. ஆனால் கேக்கற பாட்டுகளை டிவி யில் போடக்கூடாது. அந்த 'வசீகரா' பாடல் கூட அப்படித்தான். என்ன கொடுமையான் choreography இல்லை!

  ReplyDelete
 5. Aaha.. inda madhiri post naan ezhudalam nu irunden.. neenga mundhiteenga.. I wanted to write a post because of this:
  http://www.youtube.com/watch?v=8s-I54t11F0
  Tamizh kolai is done by lots of people irrespective of caste or creed.
  It was wrong of Kamal Haasan to come out with this.
  When one hears the songs sung by the likes of Yuvan Shankar Raja(I like his singing but he is King in Tamizh Kolai) or Vijay Antony or if you hear heroes like Vishaal or Vijaykanth or even Surya, it would be evident that all are culprits in Tamizh kolai regardless of caste.

  Btw, I absloutely agree with the fact that many beautiful songs have been spoiled because of the choreography/picturisation. All the songs from the movie "Sangamam" would be a classic example.

  ReplyDelete
 6. The list is endless... i will add few for my share.

  urugudhey marugudhey ( movie- veyil)- a melodious romantic song sung by shreya ghoshal painstakingly- I was shocked looking at pasupathy's action.

  Bombay jayashree and Balram had sung a song chellamey, chellamey... a romantic masterpiece in " satyam " movie- i was speechless looking at vishals and nayantaras expressions.

  Nowadays when i hear a song i could recognise ( equate with) original playback singers faces in the background.Thats better than videos i feel.

  ReplyDelete
 7. Songs not fitting with the actors on screen is one aspect. Song picturization at complete divergence with the mood/melody is a bigger problem - Vaseegara from Minnale is one of the most notorious offenders - though almost all of the songs in Gautham Menon movies have ultra-poor picturization

  Spoken Tamizh in Media (TV newsreaders/show hosts, Playback singers in Ads and songs) has been deteriorating in quality for a few decades

  Valikka Valikka Vallinathai Kolginranar
  Metthena Medhuvaaga Mellinathai Kolginranar

  Antidote - immersing oneself in MKTB and TMS songs for a few hours

  ReplyDelete
 8. 'கும்சும் கும்சும் குப்பச்சி, 'அஜூபா ஜுஜோபா'

  I like those lyrics.

  ReplyDelete
 9. Kurumbukkari: I agree that Tamizh kolai happens everywhere and has even the blessings of some powers in the industry. Apparently Rahman thinks Udit's kolai of the language is very cute and very apt for some of the young heros.

  Karuna:I know most of the videos are such a let down. even the song I have quoted from Ravanan (kalvare, kalvare) was a let down despite choreo by shobana and performance by aish. When I saw the film I did not realize that the lyrics were so beautiful. I saw this hand gesture for thelines "valimigum idangal...." and then went to check the lyrics and that is when I saw how beautiful the lines are.

  PV: aamam kolgirargale kolgirargale. ketpaar yarum illaya?

  Raj: The ajooba song has beautiful lyrucs otherwise. why have the rant in between in a totally strange language? may be for better recall value? why does a Rahman song need it?

  ReplyDelete
 10. I will right away grasp your rss as I can not in finding your e-mail subscription hyperlink or e-newsletter service. Do you�ve any? Kindly permit me realize so that I could subscribe. Thanks. internet

  ReplyDelete
 11. Thanks for any other informative blog. The place else may just I get that type of info written in such a perfect approach? I have a mission that I�m just now operating on, and I have been at the look out for such information. click to find out more

  ReplyDelete