Monday, July 5, 2010

சிக்கு புக்கு ரயிலு

முன்பெல்லாம் ரயில் பிரயாணம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எப்போதிருந்து என்றால்
"ஜன்னலுக்கு வெளிலே எட்டிப் பார்க்காதே கரி கண்ணிலே படும்" என்பார்களே அந்த காலத்திலே கூட . அப்போதெல்லாம் ஊருக்கு கிளம்பும் தினம் ஸ்டேஷனில போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறிவிடலாம். நிறைய அந்ரிஸர்வ்ட் பெட்டிகள் இருக்கும். அகப்பட்ட இடத்தில் உட்கார்ந்து கொண்டு போய் விடலாம். சிறு பெண்ணாக இருக்கையில் சென்னையிலிருந்து தஞ்சாவூர் போகும் ரயில்களில் அநேகமாக இரவு வண்டிகளில் பிரயாணம் செய்தது நினைவிருக்கிறது. இரண்டு பக்கத்துத் தாத்தாக்களின் வீடுகளும், இதர உறவினர்களின் வீடுகளும் அக்கம்பக்கமான ஊர்களில் அந்தப்பக்கம்தான் இருந்தன. ரிசேர்வ் செய்யாத காரணத்தினாலா அல்லது அப்போது குழந்தைகளுக்கு பெர்த் கிடையாதா என்று தெரியவில்லை - பெரும்பாலும் நானும் என் தங்கையும் சீட்டுகளுக்கு இடையே தரையில் தினசரி தாள்களின் மேல் விரித்த பெட் ஷீட் மேல் கிடத்தப்படுவோம். இப்போது 6 அல்லது 7 மணி நேரங்களே நீடிக்கும் பிரயாணங்கள் அப்போதெல்லாம் பல மணி நேரம் ஆகும். வழியில் வரும் ஊர்களில் எல்லாம் வண்டி நிற்கும். சில நிறுத்தங்களில்
அந்த ஊரில் விசேஷமான பழங்கள், தின்பண்டங்கள் விற்பார்கள் - பண்ருட்டி பலாப்பழம் போல.எங்கள் வீட்டிலிருந்து பெரும்பாலும் மிளகாய்ப்பொடியில் பிரட்டப்பட்ட இட்லியும் தயிர் சாதமும் கையில் கட்டிக்கொண்டு வந்திருப்பார்கள். இது போன்ற நிறுத்தங்களில் காபி, பழங்கள் மற்றும் ஏதேனும் தின்பண்டங்கள் வாங்கப்படும். சிலசமயம் எஞ்சினுக்கு கரி நிரப்புவதற்காக நிறைய நேரம் நிற்கும். அப்போதெல்லாம் பிளாட்பாரத்தில் இறங்கி நடக்க அனுமதி கிடைக்கும். என்ஜினிலிருந்து கடைசிபெட்டி வரை நடந்து விட்டால் என்னமோ எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட மாதிரி பெருமைப் பட்டுக் கொள்வோம்.

ரயிலில் ஜன்னல் பக்கம் உட்காருவதற்கு ஒரு அடிதடி. அப்புறம் பெரியவர்கள் மத்தியஸ்தம் செய்து ஒவ்வொருவரும் கொஞ்ச நேரம் ஜன்னல் பக்கம்
உட்கார ஏற்பாடு செய்வார்கள். வெளியில் காணும் காட்சிகள் எல்லாம் ஏதோ discovery சேனல் குறும்படம் போல் இருக்கும் - மரங்கள், வயல்வெளி, ஆறு, நதி, தூரத்தில் வீடுகள் அதனுள்ளே மினுமினுக்கும் விளக்குகள் என்று.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு வரை கூட இந்த fascination இருந்தது. ஒரு முறை கன்னியாகுமரி எக்ஸ்ப்ரெசில் திருச்சூர் வரை போய் வந்த பின் தீர்மானம் செய்தேன் - ஒரு முறை இந்த ரயிலில் சும்மா டிக்கெட் புக் செய்து கொண்டு கன்னியாகுமரி வரை போய் அடுத்த ரயிலில் திரும்பி விட வேண்டும் என்று - அவ்வளவு அற்புதமாக இருந்தது அந்த பாதை. எங்கு பார்த்தாலும் பசுமை ஆங்காங்கே சிறு ஓடைகள் , ஓட்டு வீடுகள் என்று.
சமீப காலத்தில் இதெல்லாம் மாறிப் போய் ரயில் பிரயாணம் என்றாலே ஒரு ஆயாசம் வந்து விடுகிறது. 'ஏன் என்ன ஆச்சு' என்கிறீர்களா? - எனக்குத்தான் வயசாகிப் போச்சு என்று நினைக்கிறேன். இல்லை இந்திய ரயில்வேயின் தரம்தான் குறைந்து போய் விட்டதா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. இத்தனைக்கும் முன்பெல்லாம் மூன்றாவது வகுப்பிலும், இரண்டாவது வகுப்பிலும்தான் பிரயாணம். இப்போதெல்லாம் ஏ சி ஆனாலும் முடியவில்லை.
லால்பாக், பிருந்தாவன் , சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏறின பத்தே நிமிஷத்தில் ஒருவர் வருவார் - காபி, டீ என்று. சற்றே நேரத்தில் வடை, சமோசா, கட்லெட் . பிறகு ஒருவர் போளி ஒப்பட்டு கொண்டு வருவார்ர். பின்னர் சிப்ஸ், சாக்லேட், பிஸ்கட் . இவர்கள் அரை மணிக்கு ஒருதரம் விடாக்கண்டர்களாய் வந்து நம்மை விசாரித்துக்கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் அதிகம் இருக்கும் பெட்டி என்றால் இன்னும் ஒருதரம் கூட வருவார்கள். காலை வண்டி என்றால் பொங்கல், இட்லி, வடை அல்லது பிரட் ஆம்லேட் , மதிய வேளையில் வெஜ் பிரியாணி, டொமாடோ ரைஸ், லைம் ரைஸ், தயிர் சாதம். அப்புறம் cold ட்ரிங்க்ஸ், ஐஸ் கிரீம் வேறே. இது போல் 6 நிமிடத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில் பிரயாணம் முழுவதும் கதவைத் திறந்து கொண்டிருப்பார்கள். இதிலேயே ஏ.சி. பெட்டி சூடாக ஆரம்பிக்கும். போதாதென்று இந்த உணவுப் பண்டங்களின் மணம் வேறு பெட்டியை நிரப்பும். ஜன்னலையும் திறக்க முடியாது. இதெல்லாம் சேர்ந்து லேசாக வயிற்றைப் பிரட்ட ஆரம்பிக்கும். இன்னும் அவற்றை எல்லாம் வாங்கி சாப்பிட்டால் என்ன ஆகுமோ தெரியாது.

இந்தக் கஷ்டங்களை நினைத்துக்கொண்டு
'ஆறு மணி நேரப் பிரயாணம்தானே , இரண்டாம் வகுப்பில் போய் விடலாம்' என்று நினைத்தால் அங்கு வேறு விதமான பிரச்சினை. இந்த வகுப்புக் கழிவறைகளை நாளைக்கு ஒரு முறைதான் சுத்தம் செய்வார்கள் போல. சில சமயம் பெங்களூரில் சென்னையிலிருந்து வந்த வண்டியில் ஏறும்போதே இவை உபயோகிக்க லாயக்கில்லாமல் போய்விடுவதும் உண்டு. அவ்வளவு மணம் வீசும்.
அப்புறம் மூவர் உட்கார ஒதுக்கப்பட்ட பலகையில் ஒருவர் வந்து ஒட்டிக்கொள்வார் - 'இதோ அரக்கோணம் வரைக்கும்' என்பார். சிலசமயம் கால் கை நீட்ட வழி இல்லாமல் சாமான்களை வைத்துப் பெட்டியை நிரப்பி விடுவார்கள்.

இரவுப்பிரயாணத்தில் வேறு விதத் தொல்லைகள் - ஒரு முறை அவசரமாக சென்னை போக வேண்டி தத்கால் திட்டத்தில் சீட்டு எடுத்து கடைசியில் அந்த பெட்டியில் மொத்தம் மூன்றே பேர். நான், இன்னொரு நடுவயது ஆண் மற்றும் டிக்கெட் பரிசோதகர். பயத்தில் இரவு முழுவதும் உறக்கமே இல்லை. இன்னொரு முறை சைடு பெர்த்தில் படுத்திருந்த ஒரு பெண்மணியை வயதுப்பையன் ஒருவன் தடவிப்பார்க்க முயற்சிக்கப் போக அதனால் தூக்கம் போயிற்று. இப்போதெல்லாம் சைடு பெர்த் என்றலே பயமாக இருக்கிறது.

இவற்றோடு கூட இப்போது இன்னொரு தொல்லை சேர்ந்து கொண்டிருகிறது - அதான் இந்த செல் போன் தொல்லை. ஆளாளுக்கு போனை எடுத்து வீட்டு
விஷயங்கள் அத்தனையும் சத்தம் போட்டு பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படித்தான் இந்த முறை சென்னை போகும் ட்ரெயினில் ஒரு மாமி தன பேரனின் ஆயுஷ்யஹோமத்துக்கு தன உற்றம் சுற்றம் எல்லோரையும் அழைத்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் எனக்கு அந்த தேதி, அட்ரெஸ் எல்லாம் மன்ப்பாடமாகிப் போச்சு. அவர் கணவருக்கு சமீபத்தில் உடம்பு சுகம் இல்லாமல் இருந்தது போல் இருக்கிறது. அதை பற்றி அவர்கள் எல்லோரும் விசாரிக்க எல்லோருக்கும் இவர் status அப்டேட் கொடுக்க பயணம் முழுக்க அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை. கூட இருந்த எங்களுக்குத்தான் தாங்கவில்லை. இன்னொரு பக்கம் ஒரு மனிதர் ஆபீஸ்மீட்டிங்கை
போனில் நடத்திக் கொண்டிருந்தார். தேவையா? இவர்கள் எல்லாம் ஒரு 5 வருஷம் முன்னாடி எப்படி வாழ்க்கை நடத்தினார்களோ தெரியவில்லை. ஒரே அலம்பல். பேசட்டும். பெட்டி முழுக்கக் கேட்கும்படியாகவா பேசுவது? இந்த ரயில்வேகாரர்களும் சரி - கழிவறைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்வதில்லை. பெட்டிகளை அவ்வபோது சுத்தம் செய்வதைப் பற்றி அவ்வளவு அக்கறை எடுப்பதில்லை. அனால் ரயில் பெட்டி முழுவதும் அங்கங்கே சுவிட்சு வைத்திருக்கிறார்கள். செல்போன் சார்ஜ் செய்து கொள்ள வசதியாய். கொடுமையோ கொடுமை.

இப்படியாகத்தானே சின்னச் சின்ன ஆசையான ரயில் பயணம் இப்போதெல்லாம் நான் தவிர்க்க விரும்பும் விஷயமாகிப் போனது.
போன முறை அமெரிக்க போன பொழுது Amtrak ட்ரெயினில் நியூ யார்க் கிலிருந்து வாஷிங்டன் வரைக்கும் போன பொழுது தோன்றியது - நம்மூரிலும் இப்படிப்பட்ட ரயில் திட்டம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று. என்னுடைய வாழ்நாளில் வருமா?

11 comments:

 1. உண்மைதான்! நான் பள்ளி காலங்களில் அனுபவித்த ரயில்பயன்னங்களின் சுகமே தனி தான். நான் கடைசியாய் முழுமையாய் என்ஜாய் பண்ணி பயணித்தது சில ஆண்டுகளுக்கு முன்பு, பீகாரில் உள்ள பொகாரோ லேருந்து, கேரளாவின் ஆலப்புழா வரை. ஒரே கஷ்ட்டம் என்ன வென்றால்; மூன்று நாளும் வீட்டில் செய்த சப்பாத்தி மட்டும் தான் சாபிடமுஜிந்து. ரயிலில் விற்பனை செய்யும் தின்பண்டங்கள் எதுவும் வாங்கரமாதிரி இருக்கவில்லை.

  பெரும்பாலான ஜனதொகைக்கு, இந்தியாவில் தொலைதூர பயணங்களுக்கு, ரயிலை விட்டால் வேறு வழி கிடையாது. பயணம் எப்படி இருந்தாலும் மக்கள் அனுசரித்து கொண்டு போவார்கள் என்று government அக்கரை எடுதுகொல்வதில்லை. (அந்த அந்நியன் பட காட்சி ஞாபகத்திற்கு வருகிறது)

  எனக்கு இந்த புல்லெட் ரயிலெல்லாம் ஏன் காலத்தில், நம் நாட்டில் பார்க்கமுடியுமோ என்றே சந்தேகம்.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. உண்மைதான்! நான் பள்ளி காலங்களில் அனுபவித்த ரயில் பயணங்களின்
  சுகமே தனி தான். நான் கடைசியாய் முழுமையாய் என்ஜாய் பண்ணி பயணித்தது சில ஆண்டுகளுக்கு முன்பு, பீகாரில் உள்ள பொகாரோ லேருந்து, கேரளாவின் ஆலப்புழா வரை. ஒரே கஷ்டம் என்னவென்றால்; மூன்று நாளும் வீட்டில் செய்த சப்பாத்தி மட்டும் தான் சாப்பிட முடிந்தது. ரயிலில் விற்பனை செய்யும் தின்பண்டங்கள் எதுவும் வாங்கரமாதிரி இருக்கவில்லை.

  பெரும்பாலான ஜனதொகைக்கு, இந்தியாவில் தொலைதூர பயணங்களுக்கு, ரயிலை விட்டால் வேறு வழி கிடையாது. பயணம் எப்படி இருந்தாலும் மக்கள் அனுசரித்து கொண்டு போவார்கள் என்று government அக்கரை எடுத்துக்கொள்வதில்லை.. (அந்த அந்நியன் பட காட்சி ஞாபகத்திற்கு வருகிறது)

  எனக்கு இந்த புல்லெட் ரயிலெல்லாம் என் காலத்தில், நம் நாட்டில் பார்க்கமுடியுமோ என்றே சந்தேகம்.

  ReplyDelete
 4. Praveen: I remember that we used to get down at junctions to fill our water bottles. I am not sure if we would have the courage to drink that water now. Same with stuff sold at the junctions and even railway food.
  Exactly we adjust maadify to everything - that is why we are like this.

  ReplyDelete
 5. I think there was some setting which specified that only registered users can post comments. I assume that is the reason why those hundred other comments on my posts have not appeared. :)
  Now removed so that yanybody can post comments (and I am sure this will be the cue for those Koreans and people who sell post links to vague sites!)

  ReplyDelete
 6. yeah, i too have the same feeling....

  Its not your age that makes you feel train journey in India cumbersome, rather our improved way of living and wide exposure to good living conditions all over the world ( say in movies, net and so on) makes one understand the nuiances.

  In some way , i feel ignorance is bliss.....

  There r times when i enjoyed karumbu juice in roadside shops, milaga bajjis at beach and late night kulfis at roadside...

  For unknown reasons, i cant enjoy them now, the living conditions in tamilnadu has not changed much... rather i feel change in me.

  Have you ever felt why you were born in India, rather than in countries like newzealand, sweden , germany ( remember am not telling U S)... definitely all indians at some part of life dofeel about it and overcome this somehow. you can blog your feelings regarding this.

  ReplyDelete
 7. karuna: Thanks for dropping by.
  While it may be partially true that it is I who has changed, I think there is definitely a lot more pollution and Governments have done nothing to improve sanitation and hygiene to keep up with the population increase. There are two very big hospitals with world class facilities near my house but right outside is an open drain. Water supplied by the corporations is hardly potable.
  That we manage to survive these conditions is a miracle.
  There are times that I have felt that I must have sinned a lot in my previous birth to be born in this country - particularly when I have to deal with the government bodies. And an aunt of mine says that we Indians will not suffer much if we are sent to hell because we already have the experience here.:)
  Having said that, I am not sure that I will be able to migrate to any of these countries just for the quality of life. This is not out of any great patriotic fervor but I don't like to live like a stranger all my life having to justify my presence in other countries.

  ReplyDelete
 8. The earlier fascination with tran journeys harks back to more innocent times - have fully enjoyed the annual North-South summer vacation pilgrimage trips with the 36 hour train journeys each way. Travel on Second sleeper or 2nd AC used to be comfortable and safe. Nowadays the day train trips or short overnight trips are OK - except for cell phone and laptop users incessesantly spoiling the gentle rolling rhythms of the train

  ReplyDelete
 9. There used to be a first class in trains which was a bliss. The seats were limited and large like in the II ac today you could sit in padmasana and watch the view thro the huge windows. Now this has been converted into III A/c and I miss the pleasure. I do agree with Karuna that we have become more demanding with exposure to cleaner places and trains. I guess railways would have maintained the trains the same even earlier but we accepted that as reality and didnt crib.
  I still enjoy the day trains from bangalore and Coimbatore though I have to sit behind glass to get the view.

  ReplyDelete
 10. Lovely piece,Usha. Am able to relate to it completely. Those leisurely train journeys( remember the Boat Mail?) slowed down the pace of life ( not that it was very fast in the first place)and, in a closed setting, forced us to take notice of and appreciate small things. Have you read Paul Theroux's travelogues on his rail journeys?

  I would like to travel from Chennai to Delhi once , in a First Class A/C compartment, with 4-5 books with me, for company.

  ReplyDelete
 11. Raj thanks. No, haven't read Theroux's travelogues. will get hold of them shortly.

  Do we still have those first class a/c compartments in trains. I thought lalu got rid of them?

  ReplyDelete