Sunday, April 10, 2011

ப்ரெசென்ட் சார்

கொஞ்ச நாட்களாய் காணாமல் போன காரணம் வேறொன்றுமில்லை இந்த வருடம் பெங்களூரில் அசாத்திய வெய்யில். எனக்கும் வயதாகிறதா தாங்கவில்லை.
ஸ்விட்ஜெர்லாந்து, ந்யு யார்க்கு இங்கே இருந்தெல்லாம் ‘ஐயோ இங்கே இன்னும் பனி கொட்டுகிறது” என்று எழுதி என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறென்.

அப்புறம் இந்த 52.11 வயதில் முதல்முறையாய் ஒரு பத்திரிக்கையில் நான் எழுதிய கதையை பிரசுரித்திருக்கிறார்கள். படிச்சு அபிப்பிராயம் சொன்னீங்கன்னா ஊக்கமாய் இருக்கும். எப்படி திருத்திக்கலாம்னும் ஐடியா சொன்னா நன்னா இருக்கும்.
உங்கள் மறுவினையை எதிர்பார்க்கும்,
உஷா

10 comments:

 1. I am unable to type using thamizh fonts ... kadai sonna vidham is good. Some parts read like a blog post - you can interpret it the other way too that you write so well that your blog posts read like a story :) - Chitra

  ReplyDelete
 2. அன்புள்ள சித்ரா
  துரித மறுவினைக்கு நன்றி. நீ தர்காலத் தமிழ் கதைகள் நிறைய படிக்கிறாய். உருப்படியாய் யோசனை சொல்லேன் திருத்திக்கொள்வதற்கு.
  nhm writer என்ற மென்பொருள் ஒரு நிமிடத்தில் தரவிறக்கலாம். அப்புறம் தமிழிலேயே அடிக்கலாம். ஜிமெயில், வெர்ட் , ப்ளாக்கெர் எல்லாவற்றுக்கும் உபயோகிக்கலாம்.

  ReplyDelete
 3. ரொம்ப நல்லா இருக்கு! முடிவு சுலபமாக கண்டுபிடிக்க முடிகறது, கதைகளம் அறிமுகமான ஒன்றாக இருப்பதால். ஆனாலும் விருவிருப்பாக இருந்தது.

  ReplyDelete
 4. யாடா அம்மணி,
  நன்றி. நிஜக்கதை ஆகையால் முடிவை மாற்ற் மனசு வரலை. எனக்கும் ஒரு சபலம். ராஜசேகரன் எஙகேயாவது புலம் பெயர்ந்து இன்னும் இருந்தால் இதைப் படித்து அவளைப் பற்றி அறிந்து கொள்வாரோ என்று.

  ReplyDelete
 5. nice story Usha... I liked the flow of words and the "yadartham"...

  Sujatha

  ReplyDelete
 6. Good to see a post from you after ages !

  Story was very well written - but ......too gloomy for comfort.

  Yaazhpaanam Patriya Kadhai Enrale Soga Mayam thevaya ?

  ReplyDelete
 7. சுஜாதா: நன்றி. :)

  பிட்டு: என்ன செய்ய, என் தோழியின் கதை சந்தோஷமாய் முடிந்திருந்தால் நானும் சந்தொஷப்பட்டிருப்பேனே! ஆனால் அவளைக் கேட்டால் எனக்கு என்ன குறை இப்போது என்றுதான் சொல்லுவாள்.

  ReplyDelete
 8. Ungalukku mazhai peivatharkku Ganeshavukku bakthiyudan vendinen....avar yen vendalai koduthirupaar yendru nambugirehn. Yenga orrai pattri konjam kooda vaitherichal vendaam. Aanal yinge weather romba super thaan.

  ReplyDelete
 9. It is wonderful to 'see' you writing again, and congratulations on having your true 'sogakathai' published. It is beautifully written, with precise rendering of painful recounts of what was said, felt and experienced. It is a terrible result of the war for both Malini and her Singhalese friend, and one can only how many thousands of other lives have been affected in similar ways because of it.

  Such irreplaceable loss as experienced by Malini, while being tragic in its own right, also extends in a similar way to people who loved once, but are forced to live apart and go through life knowing that the other is alive. Everyday, they wake up thinking of their love, pining for times lost, reflecting of past moments of joy, sharing and times together, and yes, they too keep even the simplest of souvenirs, treasure every one of them, just to look at them, and remember the past, as it is the only way to live out the present!
  Congratulations again, my prayers are for your continued good health, as your writings are so looked forward to: for their beauty, your sincerity, caring and love for the human race (as well as some pets).

  ReplyDelete
 10. anon1: உங்களின் பிரார்தனை நிஜமாகவே பலித்து முந்தாநாள் ஒரு மணி நேரம் போல மழை கொட்டொ கொட்டு என்று கொட்டி கொஞ்சம் குளிர்ந்தது. அடிக்கடி இப்படி பிரார்ததனை செய்துகொண்டிருக்கவும், கனேசருக்கு உம் மேல் பிரியம் அதிகம் எனத் தோன்றுகிறது. உங்கள் ஊரின் வெதெர் பற்றிய குறிப்பு அனாவசியமய் இருப்பினும் போனால் போகிறது. :) சிலராவது சுகமாய் இருந்தால் சரி.

  anon 2:உற்சாகப்படுத்தும் வகையிலான உங்கள் மறுவினைக்கு நன்றி.
  நீங்கள் சொல்வது சரிதான். உலகில் பலவிதஙளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். இவள் கதையில் என்னை பாதித்தது சம்பந்தமே இல்லாத காரணங்களுக்காக இப்படி அவ்ள் வாழ்க்கை மாறிப்போனதுதான். அதையும் அவள் எதிர்கொண்ட விதம் இந்தக் கதையை சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது.
  காதலித்த சிலருக்கு அது கை கூடுகிறது. ஆனால் அதுவே சில சமயம் அவர்களுக்குத் துன்பமாய் போகிறது. இருவருமே திருமணத்திற்குப்பின் மாறிப் போகையில். இதையும் பார்க்கிறேன். சிலர் காதலித்து சேர முடியாமல் போனாலும் அதே அன்புடன் இருக்கையில் இது நிஜத்தில் வெற்றிதானோ என்றும் தோன்றுகிறது.
  அட இதைக் கூட ஒரு கதையாய் எழுதலாம் போலிருக்கிறதெ? :)
  உங்கள் உண்மையான வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete