Tuesday, June 22, 2010

Raavan - என் மதிப்பீட்டில்

போன போஸ்டில் raaavan படம் பார்ப்பதற்காக நான் பட்ட பாடைப் பற்றிப் படித்த சில பேர் Raavan பட விமர்சனம் எழுதும்படி கேட்டிருகிறார்கள். பொதுவாக நான் பட விமர்சனங்கள் செய்வதில்லை. முக்கிய காரணம் எனக்கு சினிமா என்னும் கலைவடிவத்தைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாது. நான் சினிமா பார்ப்பது ஒரு பாமர ரசிகையாய். சில சமயம் ரொம்பவே அபத்தமான படத்தைப் பார்த்தால் நக்கலாக அதைப் பற்றி எழுதத் தோன்றும். மணி ரத்னம போன்றவர்கள் படம் 50% மட்டத்திற்குக் கீழே போகத்தான் வாய்ப்பே கிடையாதே?

நானும் பலரது விமரிசனகளைப் படித்தேன். முக்கியமான குற்றச்சாட்டு கதையே இல்லையே என்பது. ஓரு crime அதற்கு ஒரு motive பின்னர் ஒரு அருமையான chase பிறகு ஒரு denouement - இதற்கு நடுவில் முக்கிய கதாப்பாத்திரங்களிடம் உண்டாகும் மாற்றங்கள். எல்லாமே அளவாகத்தான் சொல்லி இருக்கிறார். "தசரத மகாராஜாக்கு மூன்று பெண்டாட்டிகள்' எனறு ஆரம்பித்து நீளமாக கதை வேண்டும் என்கிறார்களா என்ன? மணி ரத்னத்துக்கு அப்படிப் பேச வராது என்பது தெரிந்த செய்திதானே. அதே போல் அவர் யாருடைய நடத்தையையும் justify செய்யவோ condemn செய்யவோ முயற்சிக்கவும் இல்லை. இதுதான் நடந்தது எனறு சொல்லிவிட்டு 'யார் நல்லவன் யார் நல்லவன் இல்லை என்பதை நீங்களே தீர்மானம் செய்யுங்கள் எனறு விட்டு விடுகிறார். படத்தின் ராகினியைப் போலவே நாமும் யோசனையுடன் வெளியே வருகிறோம்.

இதெல்லாம் நடக்கும் களம் ஒரு அழகான காட்டுப்பகுதி. அதை எத்தனை அழகாக நமக்குக் காட்ட முடியுமோ அதனை அழகாக சந்தோஷ் சிவனும் மணிகண்டனும் காண்பித்திருக்கிறார்கள். இதிலேயே நாம் கொடுத்த பைசா வசூல். மற்றதெல்லாம் இலவச இணைப்பு தான்.

நடிப்புக்கு வருவோம் - காட்டில் வளர்ந்தவன், படிப்பில்லாதவன் என்றால் சில mannerisms தேவையா என்ன? அபிஷேக் பச்சனை காட்டுவாசியாககாட்டுவது கொஞ்சம் கஷ்டம். அந்த முகத்தில் ஆத்திரமும் கோபமும் பார்க்கும்போது நமக்கு ஏதோ ஒரு குழந்தை தலையிலும் கன்னத்திலும் அடித்துக்கொண்டு கோபப்படுவது போலத்தான் இருக்கிறது. யதார்த்தமான காட்டான் தோற்றம் வரவில்லை. பீரா முற்றிலும் காட்டான் இல்லை, சமுதாயத்தின் அநியாயங்கள், ஏற்ற தாழ்வுகளை எதிர்த்து போராளி ஆனவன் என்றால் இந்த பக் பக் பக் mannerism எல்லாம் எதற்காக? அனால் பாவம் முயன்றிருக்கிறார். அவருக்கு சரிப்படாத கதாபாத்திரம் அதனால் முயற்சிக்கேற்ற பலன் இல்லை.
ஐஸ்வர்யா- அழகோ அழகு. சரீரத்தை கஷ்டப்படுதிக்கொண்டு நடித்திருக்கிறார் - மலை ஏறி, தண்ணீரில் குதித்து, மழையில் நனைந்து - பாவம் நல்ல துணி கூட இல்லை. ஆனால் கிழிசல் கந்தலில் கூட படு அழகாக இருக்கிறார். (குடுத்து வைத்த ஜன்மம்) சில சமயம் அதிகமாகக் கத்துகிறார் - ஆனால் kidnap செய்து காட்டில் சிறை வைக்கப் பட்ட பெண என்பதினால் கொஞ்சம் கத்தினால் தப்பில்லை. என்னமோ அவருடைய அழகுதான் மனதில் நிற்கிறதே தவிர ராகினி என்ற அந்தப் பாத்திரத்தின் மன உறுதியும், தைரியமும் , fierce spirit டும் நன்றாக வெளிப்பட்டதா என்பதை யோசிக்க வேண்டி இருக்கிறது.
விக்ரம் - ம்ம்ம், அழகாக இருக்கிறார். தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்றி இருக்கிறார். நடிப்பு எனறு பெரிதாக ஒன்றும் இந்த பாத்திரத்துக்கு வாய்ப்பு இல்லை.
கோவிந்தா: மனதில் நிற்கிறார். ஆனால் எதற்கு அந்த குரங்கு சேஷ்டைகள்? அவை இல்லாமலே ஹனுமான் பாத்திரத்தை வடிவமைத்திருக்கலாம். இன்னும் கௌரவமாக இருந்திருக்கும்.
ரவி கிஷேன்:பாத்திரத்துக்கு மிகவும் சரியான நடை, பாவம், பேச்சு, நடனம் எல்லாமே. படத்திலேயே மிகச் சிறந்த performance.
பிரியா மணி: சின்ன வேஷம் . கச்சிதமாக செய்திருக்கிறார்.

இசை: ஓஹோ எனறு ஒன்றும் இல்லை. ஆனால் ரஹ்மானின் இசை கேட்க கேட்க நமக்கு பிடித்துப் போய் விடும். இன்னும் சில வருடங்களுக்கு இந்தப் பாட்டெல்லாம் காதில் கேட்டுக் கொண்டேதான் இருக்கும். பிடித்துப் போய் விடும். எந்தப் பாட்டும் படத்தின் போக்கை விட்டு விலகாமல் ஒட்டி இருப்பது நன்றாக இருந்தது.

காஸ்ட்யும்: சவ்யசாச்சி - எனக்கு இவரைப் பிடிக்கும். மற்ற designers போல் நடைமுறைக்கு ஒத்துவராத உடைகளை இவர் கற்பனை செய்வதில்லை. ஐஸ்வர்யா முதலில் தோன்றும்போது ஒரு மஞ்சள் டிரஸ் போட்டு வருகிறாரே அது ரொம்ப நன்றாக இருந்தது. அப்புறம் காட்டில் அவருக்குக் கொடுக்கப்பட்ட புடவை.அதற்கு சம்பந்தமே இல்லாத ரவிக்கை. அதுவும். ஆமாம், குத்துவிளக்குக்கு பொட்டு வைக்க வேண்டுமா என்ன? எதைப் போட்டாலும் அழகாக இருக்கிறார் ஐஸ்வர்யா. அவருக்கு நம்ம தெருக்கோடி Tailor தெய்த்தது கூட சூப்பர் ஆக இருக்கும். (ஆனால் சவ்யசாச்சிக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்: இப்போதெல்லாம் புடவைக்கு மேட்ச் ஆக ரவிக்கை கிடைக்கவில்லை என்றால் ஏதோ ஒன்றை போட்டுக் கொண்டு சவ்யசாச்சி பாணி எனறு சொல்லி விட முடிகிறது. )
விக்ரமுக்குதான் கொஞ்சம் அதிகமாக மாடல் லுக் கொடுத்து விட்டாரோ எனறு தோன்றுகிறது. நமக்குத் தெரிந்த போலீஸ்காரர்கள் எல்லாம் தொந்தியும் தொப்பையும் இருக்கிறார்களா அது வேறே.
மற்றபடி ஓகே.

ஒரு வேளை இந்த இராவணன் விஷயத்தைக் கலக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு criticism இருந்திருக்காதோ என்னமோ? சந்தர்ப்ப சூழ்நிலையால் சட்டத்தை மீறுபவனிடமும் நல்லகுணங்கள் இருக்கலாம். சட்டத்தை காக்கும் கடமை வீரர்களிடமும் சாதாரண மனிதத்துவம், சில குறைபாடுகள் இருக்கலாம். யாரும் மொத்தமான் மகாத்மா அல்லது மொத்தமான துராத்மா அல்ல - எல்லோருமே கலவைதான் எனறு பீரு, ராகினி, தேவ் என்ற சாதாரண மனிதர்களின் கதையாகவே விட்டிருந்தால் இத்தனை எதிர்பார்ப்புகள் இருந்திருக்காதோ என்னமோ. அதனால் நிராசையும் இருந்திருக்காது.
எனக்கு ஒரே ஓரு பாயிண்ட் டில் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது - அதான் அந்த அக்னிப்ரவேசம் விஷயத்தில் மணியுடைய Take என்ன வாக இருக்கும் எனறு. அதை கரெக்ட் ஆக சொதப்பி விட்டார் மனிதர்.
மத்தபடி ஓகே. போய் பாருங்கள். பைசா வசூல்தான். அப்புறம் நாமும் கும்பலோடு சேர்ந்து படத்தை திட்டலாம் பாருங்கள்.

10 comments:

 1. Azhagaana review :) Liked it... Though I didn't see the movie, these are the views I have in my mind too, after reading so many reviews around. Thanks to Praveen for mailing so many reviews which gave a clear picture of the movie, even without watching it.

  ReplyDelete
 2. திரைகதையில் இன்னும் அக்கறை செலுதிருகலாம்
  எனக்கு ரொம்ப பிடித்தது ரவி கிசென் தான்

  ReplyDelete
 3. Nice breezy style of writing. Keep it up.

  How does one type in Tamil?

  And why didn't you name it, " Vayathilladha Bandham?"

  ReplyDelete
 4. Aargee: Please go and watch - it is a visual treat. This movie has to be watched on the big screen notwithstanding its flaws.

  Praveen: Adu enna ellarum anda thiraikathaiyai pathiye polambareenga. Innum enna kadhai venum ungalukellam?

  Raj: Nanri annachi. neenga inge vandhade periya perumai enakku. adukku mele istyle adhu idhunnellam solli ore koochama pochu enakku. Hehe
  Tamilil eppadi type adippadhu enru oru mail anuppi irukken.
  Vayathilladha bandham aa? enna naan tamizh cinemava edukaren.

  ReplyDelete
 5. Please share the knowledge on how to type in Tamizh. Maybe as a post ?

  Somehow feel that your review seems to be a defence of Mani Ratnam's methods.

  You've asked the question - what if this movie was made without the Ramayana casting its shadow over it ?

  I ask you - what if someone other than Mani had made this film ? Would you have been so kind if say Selvaraghavan or Thangar Bachaan had made this movie ?

  ReplyDelete
 6. PV
  தமிழில் டைப் அடிப்பது:
  நீங்கள் Blogger உபயோகிப்பவரானால் 'create post ' திரையில் 'compose ' என்று ஒரு பட்டன் இருக்கும். இடது மூலையில். அதை தட்டுங்கள். மொழி options வரும். அதில் தமிழை தேர்வு செய்து அப்புறம் நீங்கள் பாட்டுக்கு தமிழை ஆங்கிலத்தில் அடியுங்கள்.அது தானே தமிழில் convert ஆகும்.

  கமெண்ட் போஸ்ட் செய்ய வேண்டுமென்றால் இது போல் ஜிமெயில் இல் டைப் செய்து copy paste தான் செய்ய வேண்டும்.

  அப்புறம் Raavan :.நீங்கள் சொல்வது மிகச் சரி.
  It is very likely that I am partial to Mani ratnam - not that I know about his art. but because I like his kind of cinema. It is like having a conversation with a good friend. I may not agree with all he says but I would always enjoy the company.
  That is why I started by saying I don't do film reviews. I only record my impressions.
  Have you seen it?. Please let me have your views on the film.
  அப்புறம் இந்த செல்வராகவன் இவர்களை எல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது - I watch only KB saar, Mani saar, Bharathiraja saar and Gauthaman saar. Bayangara snob illai?

  ReplyDelete
 7. Saw Raavanan today. Expectations were quite less after reading your review and Blogeswari's review too.

  Visuals - stunning - Lonely Planet guide/Nnational Geographic worthy

  Vikram - Rraves, rants, screams, cries - but I could not see the character - only Vikram the star rehashing his earlier Avatars (Sethu, Pithamagan for the most part)

  Prithviraj - is given very limited stuff to work with - delivers a sadha rasam with kozhanja saadham performance - plain, simple, dull, but nothing to offend the senses

  Aishwarya - couldn't decide if she was acting or posing as a subject for a series of paintings - couldn't even pull off hysteria or shock - forget about emoting or acting with intensity

  Karthik - Underwhelming. Was expecting him to shout "Mr.Chandramouli" instead of "Kanden Seethayai"

  The raison'd'etre for Ash kidnapping - couldn't the sister's characterization been even slightly atypical - this is a Mani movie !

  The ending - Ayyo what a waste !! The one chance to redeem himself by making Ragini stand up for herself and her values - and Mani makes a Total Theenja Payasam out of it - leaves a very bad taste in the mouth

  ReplyDelete
 8. PV: Andha promo hype has increased expectations also and has been another important reason for the epic fall i think!
  Vikram abhishek ellarodayum serndhu mani saar um romba deep a vizhunduttara?

  Prithvi would have been too young for Aish. adhu moonji innum kozhandai madiri irukku.

  Ya I felt very let down by the glossing over of the agni pariksha affair.

  ReplyDelete
 9. ராவணன் என்று பெயர் வைத்தது கதை அபஹரணம் பற்றியது என்பதால் இருக்கலாமே? அதை ராமாயணத்துடன் நாம் இணைத்து பார்த்து கொண்டு இருக்கிறோமோ என்னவோ? டிவியில் வரும் உரையாடல்களில் அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். ராமாயணத்தை படம் எடுத்ததாக அல்ல.ஒரு kidnapping படம் என்று பார்த்து review செய்தால், உஷா சொல்கிரற்போல் அந்த எக்ஸ்ட்ரா mannerism எல்லாம் இல்லாமலே எடுத்திருக்கலாம். அபிஷேக் பற்றி சொல்வது முற்றிலும் உண்மை. தமிழில் விக்ரம் நன்றாக செய்திருக்கிறார். he fits the role better .
  Effective photography. I guess we get more critical when it is a Mani movie since there is always more hype to it.

  ReplyDelete
 10. ஆமாம் அந்த பெயரை வைக்காமல் இருந்திருந்தால் நாம் இத்தனை தூரம் ராமாயணத்துடன் ஒப்பிட்டு பார்த்து விமரிசித்திருக்க மாட்டோம் எனத் தோன்றுகிறது. எதிர்பார்ப்பும் குறைவாக இருந்திருக்கும். மணி தளபதி படத்தில் கர்ணன் கதையை மிக அழகாக உபயோகித்திருந்தது போல இங்கும் செய்வார் என நான் கூட நினைத்தேன். ஆனால் பட்டி மன்றங்களில் செய்வது போல "இராவணன் மொத்தமாகக் கெட்டவனா ராமன் முழுமையாக நல்லவனா?' என்ற பாணியில் கேள்வியை எழுப்பி அதற்கான வாதங்களை ஒரு மாதிரி மேலோட்டமாக கொடுத்து "அப்படியும் வைத்துக்கொள்ளலாம், இப்படியும் வைத்துக்கொள்ளலாம்" என்பது போல் ஒரு முடிவைக் கொடுத்து விட்டு விட்டார்.
  மணியிடம் நாம் இன்னும் கொஞ்சம் எதிர்பார்ப்போம். பிழை நம் மேல்தான்.

  ReplyDelete