Thursday, July 29, 2010

மொழிப் பிரச்சினை

இந்த வலைப்பதிவில் தமிழில் எழுதுவது relaxing ஆக இருக்கிறது. சில சமயம் ஆங்கிலத்தில் எழுதுவது ஒரு பணி போலத் தோன்றும்.உணர்ச்சிபூர்வமான விஷயங்களை எழுதும்போது சில சமயம் சரியான வார்த்தை கிடைக்காது அப்படி கிடைத்தாலும் மொத்த உணர்வையும் சரியாக வெளிப்படுத்துவதாகத் தோன்றாது. அதென்னமோ 'those idiots' என்றுசொல்வதை விட 'அந்த அறிவு கெட்ட ஜென்மங்கள்' என்று சொல்லும்போது கோபம் இன்னும் சரியாக வெளிப்படுகிறது இல்லையா? ஆங்கில வார்த்தை ஆனாலும் பேசும்போது அழுத்திச் சொல்லி ஒரு சொல்லின் வீரியத்தை அதிகரிக்கலாம். ஆனால் எழுதும்போது அது கொஞ்சம் சாதுவாகி விடுகிறது. அதே போலத்தான் "I was enraged" என்பதை விட 'கொதிச்சுப் போயிட்டேன்" என்பதில் சரியாக உணர்வு வெளிப்படுவது போல இருக்கிறது. ஒரு வேளை என்னுடைய emotional self develop ஆகும் வயதில் நான் தமிழ் சூழலில் வளர்ந்ததினால் இருக்கலாமோ என்னவோ. அதே போல் யோசிக்கும் திறன் வளர்ந்த பருவத்தில் ஆங்கிலமே அதிகமாய் கேட்டும் படித்தும் இருந்ததினால் இன்றும் அறிவு பூர்வமான விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்வது எளிதாக இருக்கிறது.

ஒரு நாள் நான் என் தோழிகளுடன் படம் பார்ப்பதற்கு ஒரு mall க்கு சென்றிருந்தேன். அங்கே வந்திருந்த காலேஜ் கூட்டம் எல்லாம் ஆங்கிலத்தில்தான் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது என் தோழி சொன்னாள் 'இன்றைய நகர்புற இளைஞர்களுக்கு அவரவர் தாய் மொழியே தெரிவதில்லை. தெரிந்தாலும் அவர்கள் அதை பேசுவதை இழிவாக நினைக்கிறார்கள்", இன்னொரு தோழி சொன்னாள் " ஐயே இதெல்லாம் சும்மா வெளிவேஷம். எதிர்பாராமல் கன்னத்தில் ஒரு அறை விட்டுப் பார் "ஐயோ அப்பா என்றுதான் கத்தும்"
அப்போது பார்த்து ஒரு பெண் ஏதோ தடுக்கி கீழே விழப்போனது. ஆனால் அதன் வாயிலிருந்து "ஐயோ, அம்மா' என்றெல்லாம் வரவில்லை. 'ouch' என்றுதான் சொல்லிற்று. உடனே நான் என் தோழியைக் கேட்டேன் "இப்போது என்ன சொல்கிறாய்?" என்று. அதற்கு அவள் சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது. அவள் சொன்னாள்: " பார். இவர்களெல்லாம் மேலை நாகரீகத்தில் மூழ்கிப் போய் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தும் திறனைக் கூட இழந்து விட்டார்கள். எல்லாவற்றிலும் ஒரு செயற்கைப் பூச்சு இருக்கிறது. இதனால்தான்
இவர்கள் நிஜமான உணர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் வரும் கணங்களில் உடைந்து போய் விடுகிறார்கள். அப்புறம் மனவியல் மருத்துவர்களைத் தேடிப் போகிறார்கள்" என்று.

இது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு இன்னும் புரியவில்லை. ஆனால் கலாச்சார பூர்வமாக நம்முடைய உணர்வுகளை முழுமையாக ஒரு அந்நிய மொழியில் வெளிப்படுத்த முடியுமா என்பது எனக்கு ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. நாம் சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்படுபவர்கள். எல்லாவற்றிலும் ஒரு தீவிரம் - தீக்குளிக்கும் அளவிற்கும் போகத் தயங்காதவர்கள். ஆங்கிலேயர்கள் உணர்சிகளை மிகவும் மிதமாக வெளிப்படுத்தும் தங்களது 'stiff upper lip' பற்றி பெருமை கொள்பவர்கள். அப்படிப்பட்டவர்களின் மொழியில் நமது ஆழ்ந்த உணர்வுகளை வெளிப்படுத்த முடியுமா என்பதுதான் எனது சந்தேகம். இன்னொரு கோணத்திலிருந்து யோசித்தால் 'எந்த நாடானால் என்ன. கடைசியில் எல்லோரும் மனிதர்கள். எந்த ஊரானாலும், எந்தக் கலாசாரம் ஆனாலும் உணர்வுகள் என்பவை மனிதர்கள் எல்லோருக்கும் பொதுவானவைதானே. ஆழ்ந்த உணர்சிகளை வெளிப்படுத்த எந்த மொழியிலும் வகை இருக்கத்தானே செய்யும்" என்று.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

18 comments:

  1. Absolutely impossible. Raw/basic emotions are instinctively expressed in one's own language - even if they are not expressed aloud due to the presence of an audience

    Same goes for numerical calculations, prayers to the Gods and last but not the least - for straight-from-the-heart-curses towards Vayatherichal-inducers

    ReplyDelete
  2. "One can express easily in only one's mother-tongue. When I was in France, though I was able to speak in French, I always felt that I am not able to do justice to what I actually feel. And I always feel that we are natural only when we express in our own language. There is some kind of artificiality when we speak other languages. Though we have been familiar with English since childhood, I don't feel that we can express so well in that language. Even this comment, had I written it in Tamil, it would have sounded much better :)"

    Aargee

    ReplyDelete
  3. PV: I also think the same. That your mother tongue can only be the language of your emotions. But what about those who grow up not learning their mother tongue?

    aargee: My argument is about 2 languages you are equally comfortable in - like most of us are in English and our mother tongue.
    you can comment in Tamil by composing the comment in Gmail using the transliteration facility.
    I cannot figure out why blogger doesn't let you post your comments. I did not know your URL. So I have posted it under anon.

    ReplyDelete
  4. yes that's the reason education in mother tongue makes a huge difference. there is a certain instinctive understanding one gets when one uses their mother tongue which can go missing while using other languages.

    On another note, I see tambrahm tinges here and hence this question - why is the conical thing they keep in weddings called paruppu thenga ...

    ReplyDelete
  5. இரண்டாவது anon : பெயரை சொல்லக் கூடாதா? இந்த வலைப்பதிவின் ஆறாவது வாசகர் யார் என்று எனக்குத் தெரிந்திருக்கும்!
    பருப்புத் தேங்காய்: இதை பற்றி தெரிந்த ஒருவரிடம் கேட்டேன். அவர் சொன்னது: பல விஷயங்களை நாம் பிராமணர்களுக்கு மட்டுமே உரிய வழக்கங்கள் என்று நினைக்கிறோம். அந்த நாளில் செட்டியார்கள் கல்யாண சீராக பருப்பு, உப்பு மற்றும் தேங்காய் இவற்றை சீராக கொடுப்பார்களாம். மளிகைக்கடைகளில் சாமான்களை முக்கோணமாகபொட்டலம் கட்டி கொடுப்பார்கள் இல்லையா - அப்படியே சீரில் வைப்பார்களாம். பின்னாளில் இதே போன்ற முக்கோண பாத்திரங்களில இனிப்புகளை வைத்து சீராக கொடுக்கும் பழக்கம் ஆரம்பித்தது. அவற்றையும் பருப்புத் தேங்காய் என்றே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

    ReplyDelete
  6. முதலில் இருந்தே அவ்வளவாக தாய் மொழி கற்றுக்கொள்ளாமல் இருப்பவருக்கு அவர்களுக்கு தெரிந்த மொழியே comfortable ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் தாய் மொழியும் நன்கு தெரிந்து வேறு ஒரு மொழியும் தெரிந்து இருக்கும் போது, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப தெரிந்த மொழிகளை பயன்படுத்தலாம். நான் வளர்ந்தது எல்லாம் கல்கத்தாவில்தான். ஆனால் இரண்டாம் மொழியாக படித்தது தமிழ்தான். அதனால் எனக்கு தமிழ் ஓகே. ஆனால் அங்கேயே தலைமுறை தலைமுறையாக இருக்கும் தமிழ் குடும்பங்களில் பெரும்பாலோர் தமிழை விட பெங்காலி அல்லது ஹிந்தியே communication கு வசதியாக உணர்கின்றனர். அதாவது வேறு ஒரு மொழியில் நல்ல திறமை இருக்கும் பட்சத்தில், தாய் மொழி சரியாக தெரியவில்லை என்றால் கூட, அடிப்படை உணர்வுகளை எதிர்கொள்ளும் நேரங்களில் பிரச்சனை எல்லாம் வராது என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  7. kurumbs:
    நமது குழந்தைப் பருவத்தில் - அதாவது நமது உணர்வுகள் வளர்ச்சி அடையும் பருவத்தில் நாம் எந்த மொழியில் உணர்கிறோமோ அது நமக்கு இயல்பான மொழியாகி விடுகிறது..
    ஒரே நாட்டின் மொழிகளில் கலாசார வேறுபாடுகள் குறைவாக இருக்கும். முற்றிலும் வேறு பட்ட ஒரு அந்நிய மொழிச் சூழலில் நாம் வளரும்போது நமது கலாசார அடையாளமும் ( cultural identity ) மாறிப் போய் விடும் எனத் தோன்றுகிறது.

    ReplyDelete
  8. Current day upwardly mobile parents speak to their children only in english and the children hardly get to hear whatever their mother tongue is. For that matter their mother's tongue wags only in English. So I guess they go ouching at the age of 2 and continue ouching through their lives. I confronted a 8 year old in the lift the other day who was speaking to me in english. Her reply was 'Yes I do know tamil'. so that is how it is. In a country which has so many languages, English is slowly trying to grab the position of being the common language. I am not too sure that there is a single definition of culture either anymore. We are in transition and it is going to be fun to watch where we end up.

    ReplyDelete
  9. @ Usha : It is ok about URL. My blog is almost inactive. I just read blogs now.

    How much ever we speak English, I feel, when we are around family, we can connect to each other easily only with the language we have grown up with. To share jokes and sentiments, I would always prefer Tamil.
    "ஆழ்ந்த உணர்சிகளை வெளிப்படுத்த எந்த மொழியிலும் வகை இருக்கத்தானே செய்யும்"
    May be there would be a way, but I feel, to express such feelings, our own language conveys it much better than English.

    But it is true that things are changing now. My 4 year old, even if I speak in Tamil, he responds only in English. Even if I insist that he speak Tamil, he doesn't. Since he started speaking quite late, I don't tend to force much and I am ok if he speaks.... :)

    Chinna Kuzhandaiyai konjum podu, namma baashayil thaan naturala-aaga seiya mudiyum. Kuzhandaiyai English-il konjovadu enakku romba artificial-aaga thondrum. For that matter I am not able to find the equivalent for " kuzhandaiyai konjum podu" in English :)So you see the drawback of English there!"

    I again tried commenting, it doesnt work. Do I have to register or something in your site?

    Aargee

    ReplyDelete
  10. lalsan:நமக்கெல்லாம் எங்கேயாவது தூரதேசத்திலே தமிழைக் கேட்டாலே புல்லரிக்கும். வேலையில் இருந்தப்போ வெளிநாடுகளுக்கு போகிறபோதெல்லாம் தமிழ் பாட்டு எடுத்துக்கொண்டு போவதுண்டு. அதைக் கேட்கும்போது home sickness கொஞ்சம் குறைவாக இருக்கும். எனகென்னவோ தாய் மொழி தெரியாமல் வளரும் குழந்தைகள் அவர்களுடைய கலாசார வேர்களை இழந்து போகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.
    aargee: can you try logging into your blogger before trying to comment next time?
    why does your son prefer to speak in English? perhaps because all his friends speak in English? or is that mandatory in his school?
    I completely agree with you about feeling spontaneous and natural while using tamizh to express love for your child. I feel the same.

    ReplyDelete
  11. For those who grow up with a language other than their "native" one - then the first language of familiarity becomes their own

    Thanks for the explanation on the origins of "Paruppu Thenga" - funny how some terminology is accepted as-is without any questions on the antecedents of the nomenclature

    ReplyDelete
  12. A language has several dimensions to it. I know a lady from Germany (mother tongue German) who is much more knowledgeable about Sangam literature compared to many whose mother tongue is Tamizh.

    If we take the perspective of language being a tool for communication the nuances are far too many.

    I was watching this comedy clipping from a Thamizh movie in which the politician addresses a group of people from marginalized section and the group gets furious with him because they misunderstand his words. Then comes a translator who does Thamizh to Thamizh translation - I dont remember all of it - one part goes like this - bharathiyar sonnar achamillai, achamillai ..... and the transaltor converts it to - mersalilla, mersalilla .... appale ... It is a language that is used by specific groups for communication.

    Upwardly mobile groups speak in English probably because they travel a lot and the kid can relate to different cross cultural groups with English better ... possible right?

    Acquisition of language happens through several environmental factors like neighborhood, school, peer group, media influence and of course the home. Since learning a language requires effort kids tend to take the easy way out and choose one language and by default it has become English and I dont think it is by design that the ouching happens ...

    ReplyDelete
  13. PV:In my generation it was all pretty clearly drawn. You learnt your mother tongue at home and learnt extra languages at play and at school at a later age and hence the language of your intense emotions naturally tended to be your mother tongue.
    With so many inter-regional marriages in the past few decades , at least in cities, many kids begin to hear two languages from a very early age even in their parental interactions. I wonder which language they pray or swear in or do mathematical calculations in.
    paruppu thengai - I hadn't even thought about it until anon asked me and I checked with this friend.

    anon3:are you the same as anon2? :)
    I agree with all of your observations. But the point of the post is not only about language as a tool for communication. it is more about the importance of our language to relate to our cultural roots. The second is whether we can really express our deepest emotions in an alien language.

    ReplyDelete
  14. I understand Usha, since the comments were about upwardly mobile etc I felt like writing this.

    I am totally with you that language development phase plays a critical role in our comfort to express our deepest emotions in that language. I think it was Chompsky who did research on this.

    ReplyDelete
  15. anon 3: ah, ok. I understand now. I wondered if I hadnt made my point clear in my post. :)

    ReplyDelete
  16. yes, i do feel u are absolutely right

    when u take a growing child, if you expose the child to two languages equally, to our fascination, its brain can think ( process) in two languages. so expression of the feelings in two languages become spontaneous, without any postprocessing.

    but , most of us are exposed to english and other regional languages at a later period of life. what happens actually is postprocessing( internal translation at subconscious level which we may be unaware of it)

    i remember your previous post- i use tamizh wherever i live- particularly when i fondle babies, when i pray to god, when cursing some body within my mind.( manasukkula..)

    I just want you to appreciate one more thing- it is only possible for the brain to admire on its own functional capabilities thinking how it works!!!!!

    ReplyDelete
  17. karuna - you appear to be knowledgeable about the brain and its workings, so this may not be new to you. One needs to be cautious while exposing more than one language with children who have learning disabilities like dyslexia

    ReplyDelete
  18. Karuna; Isn't it amazing what the human brain is capable of?
    It can look at itself and admire it and as in the case of mental sickness, it can hide things from itself!

    anon: Is that because their learning disability gets more complicated with every new language you expose them to?

    ReplyDelete